கிறிஸ்டி வாக்கராகிய நான்....

கிறிஸ்டி வாக்கராகிய நான்....
கிறிஸ்டி வாக்கராகிய நான்................

Thursday, 28 November 2013

மழலை

கட்டி அணைத்து
கண் மூடினாய்

மூச்சு காற்றினால்
முகமெங்கும் சூடாக்கினாய்

இதழால் அங்கும்
இங்கும் முத்தமிட்டாய்

மார்பில் சாய்ந்து
மடியில் மண்டியிட்டாய்

கரம் பிடித்து
இதழ் குவித்து
அழகாக மழலையில்
"அம்மா" என்றாய்
அகிலமே மறந்தது........

Wednesday, 7 August 2013

மலரின் ஓ(ஆ)சை

இதழோடு
இதழ் சேர்த்து
இன்பத் தேனை
உறிஞ்சினாய்!

உள்ளுக்குள்
ஊர்ந்து சென்று
உயிரோடு
உறவாடினாய்!!

அன்பினால்
அகிலம் மறந்து
அடிவயிற்றில்
அமிலம் சுரந்தது!

தித்திக்கும்
தெவிட்டாத
தேனமுதை
தினமும் தேடினேன்
ஒரு நாள் வாழ்க்கை
மறந்து.....!!