கிறிஸ்டி வாக்கராகிய நான்....

கிறிஸ்டி வாக்கராகிய நான்....
கிறிஸ்டி வாக்கராகிய நான்................

Wednesday, 18 November 2015

திருமண நாள்....

உன்னதமான உயரிய
உயிரினும் மேலான
உறவுடன் கரம்
கோர்த்த நாள்!

மாலையிட்ட மங்கையின்
மணாளன் பதவியேற்று
மாங்கல்யம் சூடி
மகிழ்வித்த நாள்!

இன்பம் துன்பம்
உயர்வு தாழ்வு
நல்லது கெட்டது பகிர
வழித்துணை வாய்த்த நாள்!

தந்தையால் தன்கரம்
விடுத்து தான் கண்ட
தன்நிகர் மகனின்
கரங்களுக்குள் ஒப்படைத்த நாள்!

வசந்தமாய் வானவில்லாய்
உறவாய் உயிர்த்துணையாய்
இணைந்து வாழ ஏற்படுத்தப்பட்ட
ஈடு இணையற்ற நாள்!

ஈரேழு வருடங்கள் நிறைந்தது...
பதினைந்தாம் ஆண்டு பிறந்தது...
வாழ்த்தி ஆசி அளித்தோர்க்கு நன்றி!
எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி! நன்றி!! 

Tuesday, 28 April 2015

வாழ்க்கை பம்பரம்

அன்பை வெளிப்படுத்த
தெரியாத தந்தை...
பாசத்தை பிரிவினையோடு
பகிர்தளிக்கும் தாய்...
செயற்கையாக உறவை
உணர வைக்கும் உடன்பிறப்புகள்...
வரவு செலவு கணக்கு
பார்த்து பழகும் உறவுகள்...
இயந்திரதனமாய் துன்பத்தையும்
இன்பத்தையும் கடமையாக்கும் கணவன்...
ஆன்ட்ராய்டு உலகில் வசதியாக
வாழ நினைக்கும் வாரிசுகள்...
உயிரை எடுக்கும் அளவு நீண்ட
சாட்டையால் சுழற்ற பட்ட பம்பரமாய் நான்....
பம்பரத்தின் சுழற்சி குறைய
தொடங்கி விட்டது....

Tuesday, 10 March 2015

கானல் கட்டிடம்

புரியாத காலத்தில்
அறியாத வயதில்
சலனம் ஏற்படுத்தி
சம்மணமிட்டாய்...

புரிந்தும் புரியாமல்
அறிந்தும் அறியாமல்
ஆசனம் அமைத்து
அஸ்திவாரமிட்டாய்...

புரிந்து அறிந்து
புதுப்பொலிவுடன்
பார்த்தால் ஜீவ
சமாதியாக்கிவிட்டாய்!