கிறிஸ்டி வாக்கராகிய நான்....

கிறிஸ்டி வாக்கராகிய நான்....
கிறிஸ்டி வாக்கராகிய நான்................

Tuesday, 31 May 2011

பிறந்த நாள்..

அக்டோபர் 8 ஆம் நாள்

இன்று நான் இந்த மண்ணில் உதித்த நாள்!
அன்பான பெற்றோர்
ஆச்சரிய படும் பாசம் காட்டும் நண்பர்கள்
இனிமையான இம்சை தரும் உடன் பிறப்புகள்
ஈர்க்கும் வசீகரமான அரவணைக்கும் கணவன்
உயிரில் உறவான பிள்ளைகள்
ஊர் விட்டு ஊர் சென்று உறவானாலும்
என் மருமகள் என்று பெருமை பேசும் மாமன் மாமியார்
ஏக்கம் இல்லாமல் வாழ வைத்த பெரியோர்கள்
ஐம்புலன்களையும் அடக்கி ஆள கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள்
ஒற்றுமையை கற்று தந்த உயிரினங்கள்
ஓயாமல் நேரம் செலவழிக்க சொல்லி கொடுத்த மேலதிகாரி
(இ)ஃது போதும் எனக்கு இந்த ஜென்மத்தில்...................

புதிய யுகம் படைப்போம்

புதிய யுகம்
படைப்போம்!

கிருத யுகம்
திரேதா யுகம்
துவாபர யுகம்
கலி யுகம்
தாண்டி
புதிய யுகம்
படைப்போம்!

மனிதன்
முயன்று
முடியாததும்
உண்டோ!

கற்காலத்தில்
இருந்தவன்
இயந்திர தனமாய்
எந்திரனோடு
எழுகிறான்!

அனைத்தும்
அவன்
படைப்பே!

சாதி சமயம்
இல்லா
சமுதாயம் என
சரித்திரம்
தேவையில்லை!

மனிதன்
மனிதனாக
வாழ.....
வாழ்ந்து
காட்டுவோம்!

விதை
வித்திடுவோம்!

கால தாமதம்
ஆனாலும்
புதிய யுகம்
தானாய்
அமையும்!!

பஞ்சபூதங்களின் நிலை

சிக்கி முக்கி கல்லால்
கண்டுபிடிக்க பட்ட
நெருப்பு!
தலை காவேரி போன்ற
மலை உச்சியில் விளைந்த...
நீர்!
கிரகங்களின் துண்டாய்
துளியாய் விழுந்த பூமியின்
நிலம்!
அனைத்தும் காசுகொடுத்தால்
தான் மனிதனுக்கு!
சுவாசிக்கும் காற்று கூட
இன்னும் சில வருடங்களில்.....
ஆகாயம் என்றோ?
பஞ்சபூதங்களின் நிலையே
பரிதாபத்துக்குரியதானால்.......
மனிதன் நிலை?????

கரை சேரா படகுகள்

மனம் நொந்து
தினம் தினம்
முதலிரவு.

"பணம் பத்தும் செய்யும்"...
பரிதாபத்திற்குரிய
பசியற்ற பசியாற்றல்.

சாதி சமயம்
சங்கமம் இங்கு
சத்தமில்லாமல்.

உயிர்கொல்லி நோயை
உரமாகக் கொண்டு
ஊண்தின்னிகளுடன் போராட்டம்.

வாழ்க்கை விதிகளில்
வரவேற்கும் வசந்த சேவை
வண்ணம் இவர்களது.

அபாயம் என்பதன்
அடையாளமாய்
அர்ப்பணிப்பு.

கலங்கரை விளக்காய்
கரை சேர்க்க யாரிருப்பினும்
கறை களையா குருட்டாட்டம்.

சிவப்பு விள்க்குகாரி
கரை சேரவும் முடியாமல்
கரையவும் முடியாமல்!!!!

மது

அம்மி மிதித்து
அருந்ததி பார்த்துகட்டிய
மனைவிஇன்று விதவை!
அப்பா இல்லாத...
அனாதை பிள்ளை
அனுதாபத்துக்குரியவளாக
என் மகள்!
உயிருடன் இருக்கும் போது
கண்ணுக்கு தெரியாத
மனைவி மகள்,
உயிர் துறந்துகண்ணை
மறைத்த
மது இல்லாததால்
மிகத் தெளிவாய் தெரிந்தனர்!

சமத்துவ அரசு

பாஸ்மார்க் எடுத்தும்
டாஸ்மார்க்கில் நான்
அரியர் போட்டவன்
அரசாங்க வேலையில்
கேட்டால்...
கோட்டா என்கிறான்
சமத்துவ அரசு
சரிந்து கிடக்கிறது.

நிழல்

இம்சைகளும்
தொல்லைகளும்
துயரங்களும்
தரும்நிழலை விட...
நட்பு பாராட்டாத
எதிர்பார்ப்பில்லாத
எதிரியே மேல்!!!

பிச்சைக்காரி

பேருந்து ஜன்னல் ஓரத்தில் நான்!
பரதேசியாய் மின்னல் விழியுடன் அவள்!
பார்த்தவுடன் ப்ற்றியது கோபம்!
பரிதவித்தது ஒட்டிய அவள் தேகம்!
ஏக்கத்துடன் ஏந்தினாள் கையை...
ஏதுமறியா அக்குழந்தை பிச்சை கேட்டு...........


முதுமக்கள் தாழி எங்கேனும் இருந்தால்
சொல்லுங்கள் முடிவு கட்டிவிடுவோம்
குழந்தைகளை வைத்து தொழில் செய்யும்
மூன்றறிவு மூடர்களை.........


முன்னேற்றம்

எனக்கு சோறு ஊட்டியதோ
நிலவும், கதையும், பாட்டியும் அன்று!
என் பிள்ளைகளுக்கு நூடூல்ஸ் ஊட்டுவதோ
டாம் அன்ட் ஜெர்ரியும், டோரா புஜ்ஜியும்,
வேலைக்காரியும் இன்று!!

காலங்களில் அது வசந்தம்

காலங்களில் அது
வசந்தம்!

கட்டிய மனைவி
மஞ்சள் கயிற்றின்
ஈரம் காயாமல்!

கனாக்காலக்
கனவுகள் நனவாகும்
களிப்பில்!

மனைவி, பிள்ளைகளுக்காக
சேமிக்க வேண்டும்
ஈட்ட வேண்டும்
எண்ணத்தில்!

ஓடினேன்........
ஓடினேன்........
கடிகாரத்தை விட
வேகமாக!
தொழில் தந்த
முதலாளிக்காக!

வேலை.....
வேலை.....
வேலை.....
மூழ்கினேன்!

வீடு மறந்தேன்
பிள்ளை மறந்தேன்
பெற்றோர் மறந்தேன்
உற்றார் மறந்தேன்
உறவினர் மறந்தேன்
சொந்தம் மறந்தேன்
பந்தம் மறந்தேன்
என்னையும்!

அயர்ந்து கண் மூடினால்
அங்கும்
முதலாளியும் வேலையுமே!

ஓடி ஓடிதேடியதை விட
ஓடாகி தேய்ந்தது தான்
மிச்சம்!

நிதி நெருக்கடியாம்.......
பல வருடம் உழைத்த
நன்றி கூட இல்லாமல்
தூக்கி எறியப்பட்டேன்
வெளியே!

மனைவி மக்கள் பெற்றோர்
உற்றார் உறவினர் அனைவரும்
தூக்கினர் ஆறுதலாய்!

காலங்களில் அது
வசந்தம்!

கண்மூடி யோசிக்கின்றேன்
கடந்து வந்து விட்ட பின்!

காலன் வருவதற்க்குள்
கால இயந்திரம்
கண்டுபிடித்தால் சொல்லுங்கள்
பின்னோக்கி செல்ல!!!!

விதியை மதியால் வெல்லலாம்

விதியை மதியால்
வெல்லலாம்!

மதியை வெல்ல
முடியாமல்
மனதிற்குள்
போராட்டம்!

நிம்மதி
சந்தோசம்
தூக்கம்
தொலைத்தேன்!

மருந்திற்கும்
மருத்துவருக்கும்
அடிமையானேன்!

மண்டைக்குள்
மத்தள
சத்தம்!

முகமோ
சிதறி முடித்த
புஸ்வானமாய்!

நட்சத்திரங்களுடன்
நட்பு பாராட்டுகின்றேன்
நாட்களை எண்ணும்
உணர்வுடன்!

யாரிடம் செல்வது
யாரிடம் சொல்வது!

கண்ணுக்கெட்டிய
துரம் வரை
கானல் நீராய்!

நான் ஏன்
பிறந்தேன்
என்ன சாதித்தேன்
எத்தனை பேருக்கு
பயன்பட்டேன்!

ஊண் உறக்கம்
இன்றி
உழைத்தேனே
ஊதியம் இது தானோ!

கல்லை மட்டும்
காண்கிறேனோ
கடவுள்
காணவில்லையோ!

எண் ஜான்
உடம்பிற்கு
பிரதானமான
சிரசே
பிரச்சனையாய்!

மகுடமே
மண்ணில்
வீழும் நாளும்
எந்நாளோ?

திருமண நாள்

19.11.2001

மறக்க முடியாத
நாள்!

மணமாலையுடன்
மாங்கல்யம்
கிடைத்த நாள்!

இரு மனம்
இணைந்த
திருமண நாள்!

பெற்றோர்
பெரியோர்களின் ஆசி
கிடைத்த நாள்!

வாழ்க்கை
நாடகத்தில்
கதாநாயகி ஆன நாள்!

பெற்ற உறவுகளையும்
ரத்த உறவுகளையும் விட்டு
பெற்றோர் சுட்டி காட்டிய
புது உறவுடன் கை கோர்த்த நாள்!


19 .11 .2010

கண் மூடித்
திறப்பதற்குள்
ஒன்பது
வருடங்கள்
தேய்ந்து போனது!!

மருமகள் என்று
மார்தட்டும்
மாமன் மாமியார்!

அன்புடன் அரவணைக்கும்
ஆசை கொண்ட
நட்பான காதல்
கணவன்!

உயிரிலிருந்து உருவான
பேர் சொல்லும் பிள்ளைகள்
சிங்கங்களாக!

வாழ்க்கையின்
இன்பம் துன்பம்
ஆச்சரியம் அதிர்ச்சி
அனுபவம்!!

இம்மட்டும்
வழிநடத்திய
இறைவனுக்கு
இருகரம் கூப்பிய
நன்றி! நன்றி!!

சுகமான சுமை

மனம்
கனக்கிறது
அடி வயிறை
போல

ஆணா
பெண்ணா
அலைபாயும்
எண்ணங்கள்

இருண்ட அண்டத்தில்
நெளிந்த அதிர்வால்
தடைபட்ட
எண்ணங்கள்

தடவிப் பார்த்தால்
லப்டப் லப்டப்
உயிருக்குள் உயிரின்
ரீங்காரம்

நாட்காட்டியும்
கடிகாரமும்
நகராமல்
ஊர்ந்தபடி

நிற்க உட்கார
உண்ண உறங்க முடியாமல்
சந்தோஷ தியாகம்
சந்ததிக்காக

வலி அறியாத வாழ்வில்
முதன்முறையாக
மகிழ்ச்சியால்
சகித்து கொண்ட வலி

அண்டமே
வெடித்தது போன்ற
உணர்வில்
தன்னறியா அலறல்

அலறலின்
எதிரொலியாய்
குவா குவா
குரலோசை

உலகம் சுற்றியது
கண்களை திறக்க
முயன்றும்
இயலா நிலை

கண்ணீர் விலக்கி
இமை திறந்து
பஞ்சு கண்களால்
பார்த்தால்

வரவில்லை
மாதம் ஒரு முறை
வரவேண்டிய
பெத்த மகன்

காத்திருப்பு
தொடர்கிறது
முதியோர்
இல்லத்தில்

பசியால்
வயோதிகத்தால்
இயலாமையால்
வலியால்

அடிவயிறு
கனக்கிறது
மனதை
போல ........