கடல்
அன்னையின்
கருவில்
உருவானவளே!
மடியில் தவழும்
மழலையென
மண் தின்ன
போராடுபவளே!
கதிரவனை விட
சந்திரனை கண்டு
சந்தோசம்
அடைபவளே!
தோல்வி கண்டு
துவளாது
விடாமுயற்சியின்
விளக்கானவளே!
யாரை
தேடித் தேடி
தரை நோக்கி
தவழ்கின்றாய்?
நிலையில்லா
நிலத்தை நிறைத்த
ஏமாற்றம் உன்னையும்
விடவில்லையோ?