கிறிஸ்டி வாக்கராகிய நான்....

கிறிஸ்டி வாக்கராகிய நான்....
கிறிஸ்டி வாக்கராகிய நான்................

Saturday, 6 August 2011

சமச்சீர் கல்வி

சாக்கடைக்கு
சவுக்கடி!

சந்ததிக்கு
வெற்றிப்படி !

சமதர்ம சமுதாயம்
ஏற்றமும் தாழ்வும்
இல்லாமல் !

உரிமை
கடமை
சட்டம்
பேதமில்லை !

உள்ளீடுகள்
வாயால்
வெளியீடுகள்
ஆசன வாயால்
பேதமில்லை !

வாழ்வதற்கு
ஒரு ஜாண்
சாவதற்கு
ஆறு அடி
பேதமில்லை !

வருவது 
தாயிடம்
போவது
எமனிடம்
பேதமில்லை !

வாழும் நாட்களில்
சமதர்மம்
சமத்துவம்
சரிந்து கிடக்கிறது !

சரிவை
சரி செய்ய
கல்விச்சாலை
சமச்சீராக !

பிறமொழி வழி
கல்விக்கு
முற்றுப்புள்ளி!

தாய்மொழி
கல்விக்கு
தனி மரியாதை  !

கூலித்  தொழிலாளியின் மகன்
கூகிள் தொழிலாளி மகனுடன்!

முதல்வரின் மகள்
முடி திருத்துபவரின் மகளுடன்!

சாதி மத
பேதமில்லாமல்
சமத்துவ சமுதாயம்
சமச்சீர் கல்வியால்
சரித்திரம் படைக்கும் !

பால்மணம் மாறா
பச்சிளங்குழந்தைகளில்
ஆரம்பிக்கட்டும்
பாகுபாடற்ற
எதிர்காலம் !!