கிறிஸ்டி வாக்கராகிய நான்....

கிறிஸ்டி வாக்கராகிய நான்....
கிறிஸ்டி வாக்கராகிய நான்................

Tuesday, 31 May 2011

காலங்களில் அது வசந்தம்

காலங்களில் அது
வசந்தம்!

கட்டிய மனைவி
மஞ்சள் கயிற்றின்
ஈரம் காயாமல்!

கனாக்காலக்
கனவுகள் நனவாகும்
களிப்பில்!

மனைவி, பிள்ளைகளுக்காக
சேமிக்க வேண்டும்
ஈட்ட வேண்டும்
எண்ணத்தில்!

ஓடினேன்........
ஓடினேன்........
கடிகாரத்தை விட
வேகமாக!
தொழில் தந்த
முதலாளிக்காக!

வேலை.....
வேலை.....
வேலை.....
மூழ்கினேன்!

வீடு மறந்தேன்
பிள்ளை மறந்தேன்
பெற்றோர் மறந்தேன்
உற்றார் மறந்தேன்
உறவினர் மறந்தேன்
சொந்தம் மறந்தேன்
பந்தம் மறந்தேன்
என்னையும்!

அயர்ந்து கண் மூடினால்
அங்கும்
முதலாளியும் வேலையுமே!

ஓடி ஓடிதேடியதை விட
ஓடாகி தேய்ந்தது தான்
மிச்சம்!

நிதி நெருக்கடியாம்.......
பல வருடம் உழைத்த
நன்றி கூட இல்லாமல்
தூக்கி எறியப்பட்டேன்
வெளியே!

மனைவி மக்கள் பெற்றோர்
உற்றார் உறவினர் அனைவரும்
தூக்கினர் ஆறுதலாய்!

காலங்களில் அது
வசந்தம்!

கண்மூடி யோசிக்கின்றேன்
கடந்து வந்து விட்ட பின்!

காலன் வருவதற்க்குள்
கால இயந்திரம்
கண்டுபிடித்தால் சொல்லுங்கள்
பின்னோக்கி செல்ல!!!!

No comments:

Post a Comment