கிறிஸ்டி வாக்கராகிய நான்....

கிறிஸ்டி வாக்கராகிய நான்....
கிறிஸ்டி வாக்கராகிய நான்................

Saturday, 6 August 2011

தனிமை

வாட்டி வதைக்கிறது
வறுமையில் வாழலாம் 
தனிமையில்.....................

எங்கோ வெறிக்கும் 
பார்வை
கண நேரம் கனமாய்!

உமிழ்நீர் சுரப்பதற்கு 
கூட யோசிக்கிறது
பேசாத வாய்க்குள்!

தூக்கம் தூரமாய்
மனம் பாரமாய் 
நினைவுகள் நிழலாய்!

கண்மூடி யோசித்தால் 
ஞானிகள் சித்தர்கள்
துறவிகள் அதிசயமாய்!

தாயாய், தாரமாய் 
மகளாய், மருமகளாய் 
பேத்தியாய்!

தனிமையை 
தள்ளி வைக்க
பெண்மையாய்!

படைத்த 
இறைவனுக்கு
தனிமை உண்டா 
யோசிக்கிறேன்.....

No comments:

Post a Comment