கிறிஸ்டி வாக்கராகிய நான்....

கிறிஸ்டி வாக்கராகிய நான்....
கிறிஸ்டி வாக்கராகிய நான்................

Tuesday, 20 September 2011

மழை

அந்த வானம்
எல்லையின்றி
பரந்திருந்தது
கண்மூடி
கனாக் காண
கலங்கலாகியது!!

கள்ளமில்லா
கலங்கமில்லா
நிலவு வந்தது
அமைதியாய்
அனுமதியின்றி
அரவணைத்தது!!

நட்சத்திரம்
நித்திரை இன்றி
நடனமாடியது
அற்புதமாய்
அழகுக்கு
அழகு சேர்த்தது!!

யார் கண்பட்டதோ
இருண்ட வானம்
துரித கதியில்
நிலவையும்
நட்சத்திரத்தையும்
துரத்தி விட்டு
தனிமையில்
ஹோவென
கதறி அழுதது.............

No comments:

Post a Comment