கிறிஸ்டி வாக்கராகிய நான்....

கிறிஸ்டி வாக்கராகிய நான்....
கிறிஸ்டி வாக்கராகிய நான்................

Tuesday, 31 May 2011

சுகமான சுமை

மனம்
கனக்கிறது
அடி வயிறை
போல

ஆணா
பெண்ணா
அலைபாயும்
எண்ணங்கள்

இருண்ட அண்டத்தில்
நெளிந்த அதிர்வால்
தடைபட்ட
எண்ணங்கள்

தடவிப் பார்த்தால்
லப்டப் லப்டப்
உயிருக்குள் உயிரின்
ரீங்காரம்

நாட்காட்டியும்
கடிகாரமும்
நகராமல்
ஊர்ந்தபடி

நிற்க உட்கார
உண்ண உறங்க முடியாமல்
சந்தோஷ தியாகம்
சந்ததிக்காக

வலி அறியாத வாழ்வில்
முதன்முறையாக
மகிழ்ச்சியால்
சகித்து கொண்ட வலி

அண்டமே
வெடித்தது போன்ற
உணர்வில்
தன்னறியா அலறல்

அலறலின்
எதிரொலியாய்
குவா குவா
குரலோசை

உலகம் சுற்றியது
கண்களை திறக்க
முயன்றும்
இயலா நிலை

கண்ணீர் விலக்கி
இமை திறந்து
பஞ்சு கண்களால்
பார்த்தால்

வரவில்லை
மாதம் ஒரு முறை
வரவேண்டிய
பெத்த மகன்

காத்திருப்பு
தொடர்கிறது
முதியோர்
இல்லத்தில்

பசியால்
வயோதிகத்தால்
இயலாமையால்
வலியால்

அடிவயிறு
கனக்கிறது
மனதை
போல ........

1 comment:

  1. உணர்வு பூர்வமான கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete