பைக்கட்டை
தூக்கிக் கொண்டு
பத்து பைசா
மிட்டாய் வாங்க
பறந்து கொண்டு
பள்ளி சென்ற காலம்!
மணி அடித்தவுடன்
தட்டை தூக்கிக்கொண்டு
வரிசையில் நின்று
உனக்கும் சத்துணவுக்கு
இடம் பிடித்த காலம்!
மிட்டாய் வாங்கினாலும்
முட்டை வாங்கினாலும்
சமமாக பங்கிட்டு
கடித்து தின்ற காலம்!
காய்ச்சலால்
கண் திறக்காமல் நீ
படுத்திருக்கும் போது
உன் தலைமாட்டில்
அமர்ந்து கொண்டு
பள்ளி செல்லா காலம்!
பட்டணம் சென்று
கல்லூரி படிக்கும் போது
இருவரும் ஒரே
பெண்ணை காலத்தின்
கோளாறால்
காதலித்த காலம்!
நல்லது கேட்டது
அறிந்து
பெற்றோர் சொற்படி
திருமணம் செய்து
பிள்ளை பெற்று
தகப்பன்கள் ஆன காலம்!
மறக்க முடியவில்லை
நட்பை சுவாசித்து
நட்புடன் கடற்கரையில்
நடைபோடும் இந்த
வயோதிக காலத்திலும்!!
நல்ல கவிதை.
ReplyDeleteதங்கள் பதிவில் Followers Widget இணைக்கவில்லை. சேர்த்து விடுங்கள்.
நன்றி.